இந்தியில் காதல்
5/24/2011 12:40:42 PM
5/24/2011 12:40:42 PM
சிறு முதலீட்டுப் படங்களுக்கும், யதார்த்தப் படங்களுக்கும் உத்வேகமாக இருந்த பாலாஜி சக்திவேலின் காதல் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. ஏக்தா கபூர் இந்தியில் காதலை தயாரிக்கிறார். மதுரை பின்னணியில் யதார்த்தமான மனிதர்களை வைத்து சக்திவேல் படைத்த காவியம் என்று சொல்லலாம் காதலை. மொழிகளைத் தாண்டி அனைவரையும் வசீகரிக்கும் படைப்பு. இதனை உடான் படத்தை இயக்கிய விக்ரமாதித்ய மோத்வானி இந்தியில் இயக்குகிறார். இளம் நடிகர் பிரதீக் பப்பர் அனேகமாக பரத்தின் வேடத்தில் நடிக்கக் கூடும். காதல் 2004 ஆம் ஆண்டு திரைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
Post a Comment