தேனி: தேர்தல் விதிமுறைகளை மீறி தேனி மாவட்டத்தில் 2 இடங்களில் பிரசாரம் செய்த வழக்கில் நடிகை குஷ்புவுக்கு காவல் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக நடிகை குஷ்பு பிரசாரம் செய்தார். தனது பிரசாரத்தின் ஒரு பகுதியாக அவர் தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி, பழனிசெட்டிபட்டி ஆகிய இடங்களில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.
இந்த இரண்டு இடங்களிலும் அவர் தேர்தல் விதிமுறையை மீறி பிரசாரம் செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக குஷ்புவுக்கு காவல் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
இது குறித்து மாவட்ட காவல் துறையினர் கூறியதாவது,
தேர்தல் விதியை மீறி ஆண்டிபட்டி, பழனிசெட்டிபட்டியில் பிரசாரம் செய்த வழக்கில், சம்பந்தப்பட்ட காவல் நிலையங்கள் மூலம் நடிகை குஷ்புவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்றனர்.
English summary
Police department has sent a summon to actress Kushboo in connection with election rules violation case. Police have filed a rules violation case against her for campaigning against the rules in 2 places in Theni district.
Post a Comment