5/21/2011 11:56:06 AM
மலையாளத்தை விட தமிழில்தான் சமீப காலமாக நல்ல படங்கள் வருகின்றன. இதனால் கேரளாவில், தமிழ் சினிமாவுக்கு வரவேற்பு அதிகமாக உள்ளது என்று மலையாள இயக்குனர் மோகனன் கூறினார்.
'கதபரயும்போள்' (தமிழில் குசேலன்) படத்தை அடுத்து, 4 வருட இடைவெளிக்குப் பிறகு 'மாணிக்கக்கல்லு' என்ற படத்தை இயக்கியுள்ளார் மோகனன். பிருத்விராஜ், சம்விருதா நடித்துள்ள இந்தப் படம் ஹிட்டாகியுள்ளது. அவர் கூறியதாவது:
நான் இயக்கிய 'கத பரயும்போள்' படம் முழுக்க முழுக்க ஸ்ரீனிவாசன்-மம்மூட்டி படம் தான். அதில் என் பங்கு அதிகமாக இல்லை. அந்தப் படத்தில் மம்மூட்டி பணம் வாங்காமல் நடித்தார். எனது இரண்டாவது படமான 'மாணிக்கக்கல்லு' படத்தின் கதையைக் கேட்டதும் பிருத்விராஜ், எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் கால்ஷீட் தருவதாக கூறி நடித்தார். தற்போதைய காலகட்டத்தில் ஆசிரியர்-மாணவர் உறவு மோசமாக உள்ளது. ஆசிரியர் நினைத்தால் சீரழிந்து கொண்டிருக்கும் சமுதாயத்தை நல்வழிக்கு கொண்டுவரலாம் என்பதே இந்தப் படத்தின் கரு. இந்தக் கதை சினிமாவுக்கு சரியாக வராது என்று கூறி பலர் என்னை திசை திருப்ப முயற்சித்தனர். ஆனால் என் கதையில் எனக்கு நம்பிக்கை இருந்தது. அது வீண்போகவில்லை. படத்தைப் பார்த்துவிட்டு நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் எனக்கு போன் செய்து அழுதுள்ளார்கள். இது தான் என் படத்தின் வெற்றி.
ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநிலப் படங்களுக்குத் தான் வரவேற்பு அதிகமாக இருக்கும். ஆனால், கேரளாவில் மலையாள சினிமாவை விட தமிழ்ப் படங்களுக்குத் தான் வரவேற்பு அதிகமாக இருக்கிறது.
மலையாள சினிமாவை விட தமிழில் திறமை வாய்ந்த இளைஞர்கள் அதிகமாக வருகின்றனர். மலையாள ஹீரோக்களை விட சில தமிழ் ஹீரோக்களுக்கு இங்கு மார்க்கெட் அதிகமாக உள்ளது. ஒரு காலத்தில் மலையாளப் படத்துக்கு அடுத்து இந்திப் படங்களுக்குத் தான் மார்க்கெட் அதிகமாக சிறுத்தையை ரீமேக் செய்கிறார் பிரபுதேவா
Post a Comment