விஜயகாந்த்தை சந்தித்து நடிகர் பிரசன்னா வாழ்த்து

|

Tags:


சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்கவுள்ள தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த்தை சந்தித்து, நடிகர் பிரசன்னா வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

விஜயகாந்த்தை இன்று அவரது வீட்டில் வைத்து சந்தித்தார் பிரசன்னா. அவருக்கு பொன்னாடை போர்த்தி தேர்தல் வெற்றிக்காக வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் தமிழ்த்திரைப்படத் துறை தொடர்பாக இருவரும் ஆலோசித்தனர். நடிகர் சங்கத் தலைவராக இரு்நதபோது விஜயகாந்த், திரைப்படத் துறைக்கு ஆற்றிய பணிகளைப் பாராட்டினார் பிரசன்னா.

திரைப்படத் துறையின் எதிர்கால உயர்வுக்கு தன்னால் ஆனதைச் செய்வேன் என்று அப்போது பிரசன்னாவிடம் விஜயகாந்த் உறுதியளித்தார்.
 

Post a Comment