இன்டர்நெட்டில் 'கண்டேன்': கமிஷனரிடம் நடிகர் சாந்தனு புகார்

|

Tags:


சென்னை: கண்டேன் படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது தொடர்பாக நடிகர் சாந்தனு சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தார்.

நடிகர் சாந்தனு பாக்யராஜ் கதாநாயகனாக நடித்துள்ள கண்டேன் என்ற படம் சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில் சாந்தனு நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த புகார் மனுவில், கண்டேன் படத்தை இன்டர்நெட்டில் வெளியிட்டு விட்டனர் என்றும், அதோடு திருட்டு வி.சி.டி கேசட்டாகவும் வெளியிட்டு விட்டார்கள் என்றும், இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து, சம்பந்தப்பட்ட இணையதளத்தை முடக்க கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
 

Post a Comment