ஏழாம் அறிவு படத்தில் சீனப் பாடல்!

|

Tags:


சூர்யா நடிக்கும் ஏழாம் அறிவு படத்தில் ஒரு சீனப் பாடல் இடம்பெறுகிறதாம்.

ஏழாம் அறிவு படத்தில் மூன்று வேடங்களில் சூர்யா நடிக்கிறார். அதில் ஒன்று சர்கஸ் கலைஞர் வேடம். இதற்காக சூர்யா பல பயிற்சிகள் மேற்க்கொண்டு வந்தார்.

இப்போது அவர் நடிக்கும் இன்னொரு கதாபாத்திரம் பற்றிய விவரம் வெளியாகியுள்ளது. இதில் புத்த மதத்தை சேர்ந்த சாமியாராக வருகிறாராம். மற்றொரு கதாபாத்திரம் விஞ்ஞானியாம்.

குங்ஃபூ கலையை ஆராயும் கதைக்களம் என்பதால், இதில் இந்திய - சீன பழைய தொடர்புகள் குறித்தெல்லாம் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாம்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் படத்தில் ஒரு சீனப் பாடல் இடம்பெறுவதாகக் கூறப்பட்டுள்ளது. இதை 'ஹௌ' என்னும் சீன பாடகர் பாடியிருக்கிறார். அவரை வைத்தே சில தமிழ் வரிகளையும் பாடவைத்திருகிறார் ஹாரிஸ்.

'ஓமஹசீயா' மாதிரி இருக்குமோ!
 

Post a Comment