இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என் சொந்த வேலை காரணமாகவும், புதிய பட வேலையில் ஈடுபட இருப்பதாலும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பதவியில் இருந்து நான் ராஜினாமா செய்து கொள்கிறேன். இதுவரை எனக்கு ஒத்துழைப்பு அளித்த பட அதிபர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள், திரைப்பட தொழிலாளர்கள் ஆகிய அனைத்து தரப்பினருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஃபெப்ஸி தலைவர் குகநாதன் ராஜினாமா
அதேபோல ஃபெப்ஸி தலைவர் பதவியிலிருந்து விசி குகநாதன் ராஜினாமா செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “திரைப்பட தொழிலாளர்களுக்காக கடந்த 2 வருடங்களாக அரசின் உதவியை பெற்று, என்னென்ன நன்மைகள் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்தேன். தொடர்ந்து அதை செய்ய முடியுமா என்ற கேள்விக்குறி ஏற்பட்டு இருக்கிறது.
எனவே தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்து விட்டேன்.
என் ராஜினாமா கடிதத்தை செயலாளர் ஜி.சிவா, பொருளாளர் சண்முகம் ஆகியோரிடம் கொடுத்து விட்டேன்,” என்றார்.
ஜெயலலிதாவின் அதிமுக பெற்றுள்ள வெற்றியின் முதல் எதிரொலியாக இது பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவின் மிக சக்தி வாய்ந்த அமைப்புகளாகக் கருதப்படும் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் பெப்ஸி தலைமைப் பொறுப்புகளிலிருந்து இவ்விருவரும் விலகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Post a Comment