5/10/2011 3:03:03 PM
ஜூலையில் பிரபுதேவா, நயன்தாரா திருமணம் நடக்க உள்ளது. இதற்கிடையில் தெலுங்கில் என்.டி.பாலகிருஷ்ணாவுடன் 'ஸ்ரீராம ராஜ்யம்' படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. இந்நிலையில் பத்திரிகையாளர்கள், டி.வி. மீடியாக்களை சந்திப்பதை தவிர்க்கிறார். சமீபத்தில் பெங்களூரில் அவர் நடித்த 'சூப்பர்' கன்னட படத்தின் 125 நாள் விழாவில் அம்பரிஷ், சரோஜாதேவி போன்ற பிரபலங்கள் கலந்துகொண்ட விழாவில் பங்கேற்றார். அப்போது மீடியாவை சந்திப்பதை தவிர்த்தார். அமைதியாக வந்தவர் அதே அமைதியுடன் புறப்பட்டு சென்றார். பின்னர் ஐதராபாத் வந்தவர் ராமோஜிராவ் ஸ்டுடியோவில் 'ஸ்ரீராம ராஜ்யம்' படத்துக்காக போடப்பட்டிருந்த பிரமாண்ட அரங்கில் நடந்த ஷூட்டிங்கில் நாகேஸ்வரராவ், பாலகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஆகியோருடன் நடித்தார். இப்படத்தின் ஷூட்டிங் பெரும்பகுதி முடிவடைந்த நிலையில் புதிய படங்களில் நடிக்க நயனுக்கு வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. ஆனால் இதுவரை எந்த படமும் ஏற்கவில்லை. மீண்டும் அவர் மற்றொரு படத்தில் நடிப்பாரா என்பது கேள்விகுறியாகவே உள்ளது.
Post a Comment