போர்ப்ஸ் பத்திரிக்கை இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
வருடா வருடம் உலகிலேயே புகழ் மிக்க பிரபலமானவர்கள் 100 பேர் கொண்ட பட்டியலை போர்ப்ஸ் வெளியிட்டு வருகிறது. தற்போது வெளியாகியுள்ள பட்டியலில் லேடி காகாவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. கடந்த நான்கு வருடங்களாக இந்த இடத்தில் இருந்து வந்தவர் ஓப்ரா வின்பிரே. தற்போது அந்த இடத்தை காகா பிடித்து விட்டார். வின்பிரே இரண்டாவது இடத்துக்குத் தள்ளபப்ட்டுள்ளார்.
லேடி காகாவுக்கு 90 மில்லியன் டாலர் சொத்துக்கள் உள்ளன. இது தவிர அவருக்கு பேஸ்புக்கில் 3.2 கோடி பாலோயர்களும் உள்ளனர். பேஸ்புக்கில் அதிக அளவிலான ஆதரவாளர்களைக் கொண்ட பிரபலம் இவர் மட்டுமே. ட்விட்டரிலும் இவருக்கு ஒரு கோடி ஆதரவாளர்கள் உள்ளனர்.
மேலும், அவரது பார்ன் திஸ் வே என்ற பாப் பாடலுக்கு ஐந்தே நாட்களில் பத்து லட்சம் ஆடியோ பிரதிகள் விற்று விற்பனை சாதனையும் கிடைத்தது. இதை வைத்துத்தான் தற்போது போர்ப்ஸ் பிரபலங்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து விட்டார் காகா.
முதல் பத்து இடங்களில் உள்ளவர்கள் விவரம்:
1. லேடி காகா.
2. ஓப்ரா வின்பிரே
3. ஜஸ்டின் பீபர்Justin Bieber
4.யு12
5. சர் எல்டன் ஜான்
6. டைகர் உட்ஸ்
7. டெய்லர் ஸ்விப்ட்
8. பான் ஜோவி
9. சிமோன் கோவல்
10.லெப்ரான் ஜேம்ஸ்
11. ஏஞ்செலீனா ஜூலி
12. கேதி பெர்ரி
13.ஜானி டெப்
14.கோப் பிரையன்ட்
15. லியனார்டோ டிகாப்ரேயி
16. பிளாக் ஐட் பீஸ்
17. டொனால்ட் டிரம்ப்
18. பில் மெக்கிரா
19. டைலர் பெர்ரி
20. சர் பால் மெக்கார்டினி
Post a Comment