உரிய வரியைச் செலுத்திய பிறகு அவரை அதிகாரிகள் விடுவித்தனர்.
லண்டனிலிருந்து மும்பை வந்த பிபாஷா பாசு, வரி செலுத்தாத சில பொருள்களை வாங்கி வந்தார். ஆனால் இவற்றுக்கு வரி கட்டாமல் செல்ல முயன்றபோது அவரை சுங்கத் துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அவர் கொண்டு வந்திருந்த பொருள்களின் மதிப்பு ரூ 65000. இதற்கான சுங்கத் தீர்வை ரூ 13000.
இதைத் தொடர்ந்து, அவர் வரி கட்ட உடனடியாக ஒப்புக் கொண்டதோடு, அந்தப் பொருள்களுக்குரிய பில்களையும் அதிகாரிகளிடம் காட்டியுள்ளார்.
எனவே வரியை அவர் செலுத்தியதும், விடுவிக்கப்பட்டார்.
இதுகுறித்து பிபாஷா கூறுகையில், “இது ஒரு வழக்கமான செக்கப்தான். நான் மிக சாதாரண பொருள்களைத்தான் வாங்கிவந்திருந்தேன். அவற்றுக்கு சுங்கவரி செலுத்த வேண்டும் என்பது தெரியாது. ஆனால் அதிகாரிகள் சொன்னதும் நான் அதை செலுத்திவிட்டேன்,” என்றார்.
ஏற்கெனவே பிரபல நடிகை மின்னிஷா லம்பா வரி கட்டாத ரூ 55 லட்சம் வைர நகைகளுடன் வந்திறங்கியபோது பிடிபட்டது நினைவிருக்கலாம்.
Post a Comment