'ஜிங்கு சிக்கா', சேலை கட்டி ஆடும் அக்கா!

|

Tags:



மைனா படம் தந்த தூக்கலில் படு வேகமாக முன்னேறி வருகிறார் வித்தியாசமான குத்தாட்ட நடிகை நாகலட்சுமி.

மைனா படத்தில் வரும் அந்த பஸ் பாட்டை யாரும் மறந்திருக்க முடியாது. கட்டக் கருப்புக் கலரில், படு தூக்கலான கவர்ச்சியுடன், இறுக்கிக் கட்டிய சேலையுடன், ஜிங்கு சிக்கா சிக்கா என்று இன்னொரு கருப்பழகியுடன் ஜோடி போட்டு செமத்தியான ஆட்டம் ஆடியவர்தான் இந்த நாகலட்சுமி.

படு ஸ்லிக்கான ஆன இந்த கவர்ச்சிக் கட்டழகி இப்போது தமிழ் சினிமாவின தவிர்க்க முடியாத குத்தாட்ட நடிகையாக மாறியுள்ளார். செமத்தியான கவர்ச்சித் தோற்றத்துடன் கூடிய இந்த கருப்பழகி, மைனாவுக்கு முன்பும் கூட ஒரு பாடலில் ஆடியுள்ளார். ஆனால் மைனாதான் நாகலட்சுமியை ஒரே தூக்காக தூக்கி வைத்து விட்டது.

இப்போது இந்த ஜிங்கு சிக்கா அக்கா கையில் 6 குத்தாட்டப் படப் பாடல்கள் வரிசை கட்டி நிற்கிறதாம். அத்தனையும் அமச்மான குத்தாட்டப் பாட்டுக்களாம்.

நாகலட்சுமி புடவை மட்டும்தான் கட்டிப் பாடலுக்கு ஆடுவாராம். வேறு காஸ்ட்யூமைக் கொடுத்தால் மறுத்து விடுகிறாராம். சேலையில் இல்லாத கவர்ச்சியா, சேலையில்தான் எனக்கு கவர்ச்சி சிறப்பாக தெரியும் என்கிறாராம் நாகலட்சுமி.

நாகலட்சுமி சொல்வதிலும் உண்மை இல்லாமல் இல்லை. மைனா பாடலுக்கு அவர் ஆடிய அந்த ஆட்டம் இன்னும் ரசிகர்கள் மனதில் ஜிலுக்கு ஜிக்காவாக உலா வந்து கொண்டிருப்பதே அதற்கு சரியான சாட்சியம்.

 

Post a Comment