ரஜினியை நேரில் காண சரத்குமாருக்கு அனுமதி மறுப்பு

|

Tags:



சென்னை: ரஜினியை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க மருத்துவமனைக்குப் போன நடிகர் சரத்குமாருக்கு அனுமதி தரப்படவில்லை. எனவே அவர் ரஜினியின் மனைவி லதாவிடம் நலம் விசாரித்துவிட்டு திரும்பினார்.

ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினிகாந்தைச் சந்தித்து நலம் விசாரிப்பதற்காக அவர் வெள்ளிக்கிழமை பிற்பகல் போரூர் சென்றார், நடிகர் சங்கத் தலைவரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார்.

நோய்த்தொற்று ஏற்படாமல் பாதுகாக்கவும், நுரையீரல் பாதிப்புக்கு உரிய சிகிச்சையை அளிக்கவும் தீவிர சிகிச்சைப் பிரிவில் ரஜினி அனுமதிக்கப்பட்டுள்ளதால், பார்வையாளர்கள் யாரும் அவரைப் பார்க்க அனுமதிக்கப்படுவதில்லை.

இதற்கு முன் ரஜினியைப் பார்க்கச் சென்றவர்களில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் பத்திரிகையாளர் சோ மட்டுமே ரஜினியை நேரில் சந்தித்துப் பேசியதாக தெரிவித்தனர்.

விஜயகாந்த், விஜயகுமார் இருவரும் ரஜினியைப் பார்க்க வந்தபோது, அவர் தூங்கிக் கொண்டிருந்ததாகக் கூறப்பட்டதால், லதாவிடம் நலம் விசாரித்துவிட்டுச் சென்றனர்.

இதேபோல சரத்குமாரும் ரஜினியை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க முடியவில்லை.

எனவே ரஜினிகாந்த்தின் உடல் நிலை குறித்து அவர் மனைவி லதாவிடம் கேட்டறிந்த பின் புறப்பட்டுச் சென்றார் சரத்குமார்.

 

Post a Comment