மறுபடியும் நடிக்கவே மாட்டேன்-சொல்கிறார் மீனா

|

Tags:


என்னுடைய செல்லக் குழந்தையுடன் நேரத்தை செலவிடவே எனக்கு சரியாக இருக்கிறது. அவளைப் பார்த்துக் கொள்வது மட்டும்தான் இனி என்னுடைய வேலை. எனவே மறுபடியும் நான் நடிக்கப் போவதாக வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை என்று கூறியுள்ளார் மீனா.

கண்ணழகியாக, தமிழ் திரையுலகை கலக்கி வந்த மீனாவுக்கும், பெங்களூரைச் சேர்ந்த வித்யாசாகர் என்ற பொறியாளருக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடந்தது. அதன் பின்னர் அவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. குட்டிப் பாப்பாவுக்கு நைனிகா என்று பெயர் சூட்டியுள்ளனர்.

இந்த நிலையில், மீனா மீண்டும் நடிக்கப் போவதாகவும், சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜாவுக்கு மாமியார் வேடத்தில் அவர் தெலுங்கில் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இதனால் மீனா அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இந்த செய்தி எனக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது. எனக்கு நடிக்கும் எண்ணமே இல்லை. இப்போது நான் நிம்மதியாக, சந்தோஷமாக குடும்பம் நடத்தி வருகிறேன். எனது மகள் நைனிகாவை பார்த்துக் கொள்ளவே எனக்கு நேரம் போதவில்லை. எனவே மீண்டும் நடிக்கும் எண்ணம் என்னிடம் இல்லை என்றார் மீனா.
 

Post a Comment