நான் கர்ப்பமாக இல்லை-ஷில்பா ஷெட்டி மறுப்பு

|

Tags:



தான் கர்ப்பமாக இருப்பதாக வெளியாகியுள்ள செய்திகளை நடிகை ஷில்பா ஷெட்டி மறுத்துள்ளார்.

தான் காதலித்து வந்த லண்டன் தொழிலதிபரான ராஜ் குந்த்ராவை மணந்து அவருடன் லண்டனில் வாழ்க்கை நடத்தி வருகிறார் ஷில்பா. இந்த நிலையி்ல் அவர் கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாகின.

இதையடுத்து பலரும் ஷில்பாவைத் தொடர்பு கொண்டு தாயாகப் போவதற்காக வாழ்த்து தெரிவிக்க ஆரம்பித்தனர். ஆனால் தான் கர்ப்பமாக இல்லை என்று குண்டைப் போட்டுள்ளார் ஷில்பா.

இதுகுறித்து அவர் கூறுகையில், எத்தனை கால்கள், எத்தனை மெசேஜ்கள். அத்தனைக்கும் பதிலளித்து எனக்கு சலித்துப் போய் விட்டது. நான் கர்ப்பமாக இல்லை. இதுதான் இப்போதைக்கு என்னிடமிருந்து வரும் விசேஷ செய்தி. அதுதொடர்பாக வெளியான அத்தனை செய்தியும் பொய். எனக்கு இதைப் படித்து தலை சுற்றிக் கொண்டு வருகிறது என்று தனது ட்விட்டர் தளத்தில் கூறியுள்ளார் ஷில்பா.

கடந்த வாரம்தான் ஷில்பா கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதை தற்போது ஷில்பாமறுத்து விட்டார். தனது ட்விட்டர் செய்தியில் மேலும் அவர் கூறுகையில், மீடியாவில் வந்ததைப் போல இப்போதைக்கு எதுவும் இல்லை. எதுவாக இருந்தாலும் நானே சொல்வேன் என்றும் ஷில்பா கூறியுள்ளார்.

நான் பிரபலமானவளாக இரு்ந்தாலும் கூட எனக்கும் பிரைவஸி உண்டு என்பதை மீடியாக்கள் உணர வேண்டும். அதற்கு மதிப்பளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றும் ஷில்பா கோரியுள்ளார்.

தற்போது தன்னுடைய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ஒரே பதட்டத்துடன் இருக்கிறாராம் ஷில்பா.

முதல்லை கோப்பையை வெல்லட்டும், அப்புறம் பாப்பா பத்திக்கவலைப்படலாம் என நினைத்து விட்டாரோ ஷில்பா.

 

Post a Comment