தெலுங்கில் முன்னணி நடிகை அனுஷ்கா. சிங்கம், வேட்டைக்காரன் போன்ற தமிழ் படங்களில் நாயகியாக நடித்தவர் அனுஷ்கா. தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார்.
சமீபத்தில் அளித்த பேட்டியில், ” தெலுங்குப் படங்கள் ஆர்ப்பாட்டமானவை. ஆனால் தமிழ்ப் படங்கள் ஆழமானவை… யதார்த்தத்தைப் பிரதிபலிப்பவை. எனக்கு இந்த இருவகைப் படங்களிலும் நடிப்பது சுவாரஸ்யமாக உள்ளது.
வானம் படத்தில் விலைமாது கேரக்டரில் நடித்தேன். அதன் ஒரிஜினல் படமான வேதம் படத்திலும் இதே கேரக்டரை நான் செய்திருந்தேன். எந்த மொழியில் அந்தப் படத்தை ரீமேக் செய்தாலும் அந்த வேடத்தை நானே செய்ய விரும்புகிறேன்.
ஒரு யோகா டீச்சராக என் வாழ்க்கையை ஆரம்பித்தேன். 12 வயதிலிருந்து யோகா செய்கிறேன். தினமும் குறைந்தது ஒரு மணி நேரமாவது யோகா செய்து விடுவேன். சூரிய நமஸ்காரம், ஆசனங்களை மட்டும் 108 தடவை செய்வேன்.
ஷில்பா ஷெட்டி போல் யோகா ஆல்பம் வெளியிடு வீர்களா என்று என்னிடம் கேட்கின்றனர். அந்த அளவு யோகாவில் நான் மேதை இல்லை. இன்னும் ஒரு மாணவி போலவே என்னை உணர்கிறேன். எனது குரு பரத் தாகூர் அது போன்று ஆல்பம் வெளியிடலாம்.
விக்ரமுடன் இணைந்து நடிக்க ஆர்வம் இருந்தது. தெய்வத்திருமகள் படத்தில் அது நிறைவேறி உள்ளது. சிங்கம் படத்தை இந்தியில் ரீமேக் செய்து அதில் நடிக்க அழைத்தனர். நான் மறுத்து விட்டேன். தென்னிந்திய மொழி படங்களே எனக்குப் போதும்”, என்றார்.
Post a Comment