5/21/2011 11:53:32 AM
பட்டியல் சேகர் தயாரிப்பில், சத்யசிவா இயக்கும் படம், 'கழுகு'. கிருஷ்ணா ஹீரோ. பிந்து மாதவி ஹீரோயின். ஒளிப்பதிவு, சத்யா. இசை, யுவன்சங்கர்ராஜா. படம் பற்றி கிருஷ்ணா கூறியதாவது: 90 சதவீத ஷூட்டிங் முடிந்துள்ளது. மூணாறில் கடுமையான வெயில். இரு பாடல் மற்றும் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியை படமாக்க, மேகமூட்டம் தேவை. சீஸன் அடுத்த மாதம் தொடங்கும் என்பதால், காத்திருக்கிறோம். பிந்து மாதவியும், நானும் சந்திக்கும் முதல் காட்சி உருக்கமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கும்.
திரைக்கதையும், யுவன்சங்கர் ராஜாவின் இசையும் படத்தின் உயிர்நாடி. பின்னணி இசைக்கு நிறைய ஹோம் ஒர்க் செய்து வருகிறார் யுவன். அவர்தான் இப்படத்தின் ஹீரோ. கொடைக்கானல் பகுதியில் வாழும் நான்கு நண்பர்களை பற்றிய கதை. நண்பர்களாக நான், தம்பி ராமய்யா, கருணாஸ், பிரவீன் நடிக்கிறோம். இந்தப் படத்தையடுத்து, என் அண்ணன் விஷ்ணுவர்தன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறேன். இதன் ஷூட்டிங் இவ்வருட இறுதியில் தொடங்குகிறது.
Post a Comment