5/18/2011 3:20:29 PM
'நான் சிவனாகிறேன்' பட இயக்குனர் ஞானசேகர் கூறியது: இது சைக்கோ த்ரில்லர் படம் என்றாலும் காதல், பாடல் என்று கமர்ஷியலாக இயக்கி இருக்கிறேன். சைக்கோ கதைக்கு எப்போதும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். கடைசியாக வெளியான சைக்கோ கதை கொண்ட 'நடுநிசி நாய்கள்' படம், அந்த எதிர்பார்ப்பை சிதைத்துவிட்டது. படம் பார்ப்பவர்கள் கடுமையாக விமர்சிக்கும் அளவுக்கு ஒரு கதையை படமாக்குவது ஆரோக்கியமான அணுகுமுறை அல்ல. இத்தகைய படங்களிலும் ஒரு மெசேஜ் சொல்ல வேண்டும் என்பது என் எண்ணம். அதன் அடிப்படையில்தான் 'நான் சிவனாகிறேன்' கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த கதைக்கு ஹீரோயின் தேவையில்லையென்றாலும் கமர்ஷியல் அம்சத்துக்காக பயன்படுத்தி இருக்கிறேன். ஹீரோயினாக வர்ஷா. ஹீரோவாக உதய் கார்த்திக் நடிக்கின்றனர். திருச்சி, திருப்பூர், சென்னையில் ஷூட்டிங் நடந்துள்ளது.
Post a Comment