விருதுக்காக படமெடுக்கவில்லை, பணத்துக்காகத்தான் இயக்குகிறேன்-வெற்றி மாறன்

|

Tags:


நான் பணத்துக்காகத்தான் படம் எடுக்கிறேன், விருது பெற வேண்டும் என்பதற்காகவெல்லாம் படம் எடுக்கவில்லை. இனி தனுஷை வைத்துப் படம் எடுக்க மாட்டேன் என்று இயக்குநர் வெற்றி மாறன் கூறியுள்ளார்.

ஆடுகளம் படத்தை இயக்கியவர் வெற்றி மாறன். இந்தப் படத்திற்காக ஏகப்பட்ட தேசிய விருதுகள் கிடைத்தபோது மகிழ்ச்சி அடைந்தவர்களை விட, சந்தோஷப்பட்டவர்களை விட அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தவர்கள்தான் மிக மிக அதிகம்.

இவர் ஏற்கனவே தனுஷை வைத்து பொல்லாதவன் என்ற படத்தை இயக்கிவர். பின்னர் ஆடுகளம் படத்தை இயக்கினார். அடுத்து தனுஷை வைத்துப் படம் இயக்கும் எண்ணம் இல்லை என்கிறார் வெற்றிமாறன்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

மாற்றத்தில் நம்பிக்கை உடையவன். திரும்பத் திரும்ப ஒரே மனிதர்களுடன் பணியாற்றுவது இருதரப்பினருக்குமே போரடிக்கும். மாற்றம் அவசியம். தனுஷை வைத்து அடுத்த படத்தை இயக்கமாட்டேன் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், விருது வாங்க வேண்டும் என்பதற்காக நான் படம் எடுப்பதில்லை. பணம் சம்பாதிக்கத்தான் படங்களை இயக்குகிறேன் என்றார் வெற்றி்மாறன்.

ஓஹோ, ஒருவேளை இதனால்தானோ என்னவோ, நார்வே பட விழாவில் ஆடுகளம் படத்திற்குக் கொடுத்த விருதை வாங்கி தூக்கி கீழே போட்டு மிதித்து விட்டு வந்தாரோ என்னவோ வெற்றிமாறன். ஒருவேளை பணமாக கொடுத்திருந்தால் சந்தோஷமாக வாங்கிக் கொண்டு வந்திருப்பார் போலும்!
 

Post a Comment