5/20/2011 11:41:37 AM
சன் பிக்சர்சின் 'ஆடுகளம்' படத்துக்கு சிறந்த நடிகர், சிறந்த இயக்கம், சிறந்த திரைக்கதை, சிறந்த நடனம், சிறந்த எடிட்டிங் உட்பட 6 விருதுகள் கிடைத்தன. தேசிய விருது பெற்றது குறித்து நடிகர் தனுஷ் பெருமிதத்துடன் கூறியதாவது: 'ஆடுகளம்' படத்தை, தேசிய விருதுக்கு அனுப்பினது தெரிந்து மகிழ்ச்சி அடைந்தேன். விருது கிடைத்தது அறிந்து சந்தோஷத்துக்கு அளவே இல்லை. தேசிய விருது ஜூரிகளுக்கு நன்றி. ஏனென்றால் வட இந்தியாவில் தனுஷ் என்பவனை யாருக்குமே தெரியாது. அதற்கு பிறகு அம்மா, அப்பாவுக்கு நன்றி சொல்லிக்கிறேன். எனக்கு சேர்கிற எல்லாத்துக்கும் அவங்களுக்கும் பொறுப்பு இருக்கிறது. எனக்கு நடிப்பு சொல்லிக்கொடுத்த அண்ணன் செல்வராகவனுக்கும் இந்த விருதில் பங்கு இருக்கிறது. முதல் நாளில் இருந்தே விருது கிடைக்கும் என்று சொல்லி வந்த என் மனைவி ஐஸ்வர்யாவுக்கும் நன்றி. படத்தை பெரிய அளவுல மக்கள்கிட்ட கொண்டு போய் சேர்த்த சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் சாருக்கு கட்டாயம் நன்றி சொல்லணும். இந்த விருதை ரஜினி சாருக்கு அர்ப்பணிக்கிறேன். அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்திக்கிறேன்.
Post a Comment