ஹாலிவுட், பாலிவுட் சினிமாக்காரர்கள் விரும்பும் புதுச்சேரி!

|

Tags:



புதுச்சேரி எனும் பாண்டிச்சேரியில் சினிமா எடுத்தால் ஓடாது என்று ராசி பார்த்து வந்தது ஒரு காலம்.

ஆனால் இன்று நிலைமை தலைகீழ். பெரும்பாலான படங்களின் ஒரு காட்சியாவது புதுச்சேரியில் எடுக்கப்படுவது வழக்கமாக உள்ளது. தமிழ் சினிமாவை விடுங்கள்… பாலிவுட், ஹாலிவுட் என சர்வதேச சினிமாக்கள் எடுக்கப்படும் இடமாக மாறியுள்ளது புதுச்சேரி.

கடந்த மூன்று மாதங்களில் மட்டும் மூன்று ஹாலிவுட் படங்களின் படப்பிடிப்பு இங்கு நடைபெற்றுள்ளது.

இந்தி நடிகர் அமீர்கான், நடிகை கரீனாகபூர் நடிக்கும் புதிய படத்தின் படிப்பிடிப்பும் சமீபத்தில் இங்கு தொடங்கியது. இந்த படத்தில் நடிகர் அமீர்கான் கிரைம் பிராஞ்ச் போலீஸ் அதிகாரியாகவும் அவருக்கு ஜோடியாக கரீனா கபூரும் நடிக்கின்றனர். இன்னொரு ஜோடியாக நடிகை ராணிமுகர்ஜி நடிக்கிறார். புதுவை அண்ணாமலை ஓட்டல், எழில் மிகுந்த பகுதிகளான ஊசுடு ஏரி, பிள்ளையார்குப்பம், புதுவை கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறுகிறது.

இந்தப் படம் தவிர, ஏராளமான தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்கள் புதுவையில் படமாகின்றன. புதுச்சேரியில் படப்பிடிப்பு நடத்துவோருக்கு ஏராளமான சலுகைகள் தரப்படுவதால், இங்கு படப்பிடிப்பு நடத்துவதையே அனைவரும் விரும்புகிறார்கள்.

இதைத் தொடர்ந்து புதுவையிலேயே படம் தயாரிப்பதற்கான ஸ்டுடியோ உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தித் தரவும் அரசு முடிவு செய்துள்ளது.

 

Post a Comment