5/16/2011 10:56:13 AM
கிரிக்கெட் சீசன்களில் பரபரப்பாகச் செய்திகளில் வலம் வருபவர் லட்சுமிராய். இம்முறை அதிகம் தலைகாட்டாமல் அமைதியாகிவிட்டார். கடந்த சில தினங்களுக்கு முன்பு மும்பையில் நடுக்கடலில் தனது 23வது பிறந்த தினத்தைக் கொண்டாடியிருக்கிறார்.
ரகசியமாக பர்த் டே கொண்டாட்டம்?
ரகசியம் எதுவும் இல்லை. என் வயதையே தைரியத்தோடு சொல்பவள் நான். வித்தியாசமாக கொண்டாட முடிவு செய்தேன். அதனால் படகில் கடலுக்குள் சென்று கொண்டாடினேன். மோகன்லால், பிரியதர்ஷன் வந்தாங்க. மற்றவர்கள் என் பர்ஷனல் ஃபிரண்டுகள்.
தமிழில் நிறைய இடைவெளி விடுகிறீர்களே?
என் படம் வெளிவந்து ஒரு வருடமாகிவிட்டது. ஆனாலும் தொடர்ந்து நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். தமிழ், மலையாளத்தில் தலா இரண்டு படங்கள். தெலுங்கில் ஒரு படம் என்று பிசியாகத்தான் இருக்கிறேன். இந்த ஆண்டு இந்தியில் நடிக்கப்போகிறேன். அதற்கான பேச்சு வார்த்தை முடியும் தருவாயில் இருக்கிறது.
தமிழில் கிளாமர் இமேஜ்தானே இருக்கிறது?
அதெல்லாம் பழைய கதை. 'தாம் தூம்' படத்துக்கு பிறகு அந்த இமேஜ் மாறிவிட்டது. என் படத்துக்கு பெண்களே திரண்டு வருகிறார்கள். மலையாளத்தில் என்னை தங்கள் குடும்பத்தில் ஒருவராக பார்க்கிறார்கள். இன்றைய தேதியில் அங்கு நான்தான் நம்பர் ஒன். அதுக்காக கவர்ச்சியை கைவிட்டுவிட்டேன் என்று அர்த்தம் இல்லை. அதற்கான வாய்ப்பு வரும்போது நடிப்பேன்.
இந்த கிரிக்கெட் சீசனில் அதிகமாக ஆளைக் காணோமே?
இதுக்குத்தான் நான் தமிழ்நாட்டு பக்கம் வரப் பயப்படுகிறேன். ஒரு ரசிகையாக கிரிக்கெட் பார்க்கப்போனால் அதையும் சர்ச்சை ஆக்கிவிடுகிறார்கள். பிடித்த வீரர்களுடன் விருந்தில் கலந்துகொண்டால் அதையும் தவறென்கிறார்கள். அதனால்தான் நானே தவிர்த்து விட்டேன். ஆனாலும் மும்பை, கொச்சியில் நடந்த ஐபில் போட்டிகளுக்கு மீடியா கண்ணில் சிக்காமல் போய் வந்தேன். உலக கோப்பையை வென்றதும் டோனிக்கு வாழ்த்து சொன்னேன்.
Post a Comment