ஜூன் முதல் கமல்ஹாசன் விஸ்வரூபம்

|

Tags:


கமல்ஹாசன் நடிக்க, செல்வராகவன் இயக்க உருவாகவிருக்கும் விஸ்வரூபம், படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் தொடங்குகிறது.

கமல் படம் போலவே இல்லை என்று அத்தனை பேரும் பாரபட்சமில்லாமல் கூறிய மன்மதன் அம்பு படத்திற்குப் பிறகு கமல்ஹாசன் நடிக்கப் போகும் படம் செல்வராகவனின் விஸ்வரூபம்.

இப்படத்திற்கான மெனக்கெடல்கள் நீண்ட நாட்களாக நடந்து வந்தது. இடையில் இப்படம் இப்போதைக்கு இருக்காது என்றும் பேச்சு எழுந்தது. ஆனால் தற்போது படப்பிடிப்புக்கு கமல் மற்றும் செல்வராகவன் கூட்டணி தயாராகி விட்டது.

ஜூன் மாதம் படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளனர். இப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்கவிருப்பவர் சோனாக்ஷி சின்ஹா.

இதற்கிடையே, சோனாக்ஷிக்கும், காத்ரீனா கைபுக்கும் இடையே புகைச்சல் பெருக்கெடுத்துள்ளதாம். சல்மான்கான், சோனாக்ஷியை தனது அடுத்த படத்திற்காக அழைத்ததால் சோனா மீது காத்ரீனாவுக்கு சற்று காட்டமாகியுள்ளதாம்.

ஆனால் இதுகுறித்து சோனாவிடம் கேட்டால், அதெல்லாம் இல்லை. பெண்கள் பொதுவாகவே எதையும் வெளிப்படையாக பேச மாட்டார்கள். இதை வைத்து கதை கட்டி விட்டு விட்டார்கள் என்கிறார்.

முன்னாள் பாலிவுட் ஹீரோ சத்ருகன் சின்ஹாவின் மகள்தான் சோனாக்ஷி என்பது குறிப்பிடத்தக்கது.
 

Post a Comment