5/23/2011 2:24:38 PM
கமர்சியல் ஹீரோயினாக நடித்து திகட்டி விட்டது என்று த்ரிஷா கூறினார். அவர் மேலும் கூறியதாவது: இப்போது 'பாடிகார்ட்' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷுடன் நடித்து வருகிறேன். தெலுங்குக்காக கதையில் மாற்றம் செய்துள்ளனர். தமிழில் அஜீத்துடன் நடித்த 'மங்காத்தா' முடிந்துவிட்டது. அடுத்து சில படங்களுக்கு பேசி வருகிறேன். ஹீரோக்களோடு டூயட் பாடி, அவர்களுக்காகச் சிரித்து அழும் வழக்கமான கமர்சியல் பட ஹீரோயின் கேரக்டர் திகட்டி விட்டது. நடிப்புக்கு அதிக முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் நடிக்க ஆசை. நடிக்க வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னும் ஒரே மாதிரி நடிக்க வேண்டுமா? என்று என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். இந்தி 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில் நடிக்கவில்லையா என்று கேட்கிறார்கள். நடிக்க வேண்டும் என்ற ஆசையில்தான் 25 நாள் கால்ஷீட் கொடுத்திருந்தேன். அந்த தேதியில் அவர்களால் படம் எடுக்க முடியவில்லை. பிறகு அவர்கள் கேட்ட தேதியை என்னால் கொடுக்க முடியாமல் போய்விட்டது. இதில் எனக்கும் வருத்தம், அவர்களுக்கும் வருத்தம். இந்தி படத்தில் நடிக்க வேண்டும் என்று ஒரு போதும் ஆசைப்பட்டதில்லை. இந்தியில் நடித்தால் நிறைய நாள் கால்ஷீட் கொடுக்க வேண்டும். வட இந்திய மீடியாக்களின் கண்ணில் பட்டுக்கொண்டே இருக்க வேண்டும். ஆனாலும் நல்ல வாய்ப்பு வந்தபோது நடிக்க மறுக்கவும் முடியாது. அப்படி வந்த ஒரு வாய்ப்பில் நடித்தேன். இனி வரும்போது நடிப்பேன்.
Post a Comment