சிங்கப்பூர்: சென்னையில் அறிவித்தது போல, சிங்கப்பூர் கிட்னி பவுண்டேஷன் மருத்துவமனையில் ரஜினி சிகிச்சை பெறவில்லை. சிங்கப்பூரில் மிகப் பிரபலமான மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த மருத்துவமனையில் இந்தியாவின் அமர்சிங் உள்ளிட்ட பிரபல விஐபிக்கள் சிகிச்சைப் பெற்று நலமுடன் திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னையிலிருந்து சிங்கப்பூர் வந்திறங்கிய ரஜினியை, மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் இப்போது சேர்த்துள்ளனர் அவரது மகள்களும் மருமகன்களும்.
இன்று இரவு விமானத்தில் செல்லும் லதா ரஜினி, மருத்துவமனையில் ரஜினியைப் பார்த்துக் கொள்கிறார். அவருடன் ரஜினியின் பேரக் குழந்தைகள் யாத்ரா, லிங்காவும் செல்கிறார்கள்.
ரஜினியை சிக்ச்சைக்காக சேர்த்திருப்பது குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, அதுகுறித்த எந்த விவரமும் சொல்வதற்கில்லை என்றும், நோயாளிகளின் தனிமை மற்றும் ரகசியத்தைக் காப்பது தங்களின் முக்கிய கடமை என்றும் தெரிவித்தனர்.
Post a Comment