திடீர் உடல் நலக்குறைவு: நடிகர் செந்தில் ஆஸ்பத்திரியில் அனுமதி
5/20/2011 12:28:05 PM
5/20/2011 12:28:05 PM
சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தமிழகமெங்கும் ஒரு மாதம் பிரசாரம் செய்தார். நேற்று முன்தினம் செந்திலுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மூல நோயால் அவதிப்பட்டார். உடனடியாக அவரை அமிஞ்சிகரையில் உள்ள பில்ரோத் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர் கண்ணன் தலைமையிலான குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்தனர். செந்திலுக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. தற்போது குணமாகி வருவதாகவும் ஓரிரு நாளில் டிஸ்சார்ஜ் ஆகி விடுவார் என்றும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Post a Comment