5/11/2011 11:53:37 AM
தபாங் படத்தை தமிழில் ரீமேக் செய்வதை நேற்று சிம்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அவர் ஏற்கனவே கூறியது போல் தரணி இந்தப் படத்தை இயக்குகிறார். மலடிஃபிளிக்ஸ் ரசிகர்களை மனதில் வைத்து படங்கள் எடுத்து வந்த பாலிவுட்டுக்கு விழுந்த மரண அடி, தபாங். எண்பதுகளின் தெலுங்கு ஆக்சன் படத்தைப் போல் முன்வரிசை ரசிகர்களுக்காக எடுக்கப்பட்ட படம்தான் தபாங். பீட்ஸா சாப்பிட்டு வந்த நாக்குகளுக்கு இந்த சால்னா சாப்பாடு ரொம்பவே பிடித்துப்போக படம் சூப்பர் டூப்பர்ஹிட். அறிவுஜிவி படங்களின் கலெக்சன் ரிக்கார்டுகளை எல்லாம் தபாங் அடித்து நொறுக்கிறது. அந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில் சிம்பு நடிக்கிறார்.
தரணி இயக்கும் இந்தப் படத்துக்கு ஒஸ்தி என்று பெயர் வைத்துள்ளனர். ஒஸ்தி தமிழ் பெயரா என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது. பாலாஜி ரியல் மீடியாஸ் சார்பில் டி.ரமேஷ் படத்தை தயாரிக்கிறார். ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லை. ஒஸ்திக்காக மீசை எடுத்து, மசில் வைக்கப் போகிறார் சிம்பு. தபாங் ஹீரோ போலீஸ் அதிகாரி என்பதால் போலீஸ் அதிகாரிகள் சிலரின் பாடி லாங்வேஜை ஸ்டடி செய்யும் பணியும் நடந்து கொண்டிருக்கிறதாம்.
Post a Comment