ஹைதராபாதில் உள்ள ஷம்ஷாபாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டன் செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் (போயிங் 767) நேற்று புறப்பட தயாராக இருந்தது. அதில், பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா உள்பட 200 பயணிகள் இருந்தனர்.
விமானத்தை மேலே எழுப்ப முயன்றபோது, விமானத்தின் வலது பக்க என்ஜினில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, அதிவேகத்தில் விமானத்தை மேலே எழுப்பும் முயற்சி, அவசரமாக நிறுத்தப்பட்டது.
இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. நாகார்ஜூனா உள்ளிட்ட பயணிகள் உயிர் தப்பினர். கோளாறை சரிசெய்யும் பணியில் என்ஜினீயர்கள் ஈடுபட்டனர்.
பயணிகளை மாற்று விமானத்தில் அனுப்பும் முயற்சியில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் ஈடுபட்டது. பயணிகளுக்கு ஏற்பட்ட அசவுகரியத்துக்கு மன்னிப்பும் கேட்டுக்கொண்டது.
Post a Comment