சூர்யாவுடன் இணையும் காஜல் அகர்வால்!

|

Tags:


தம்பி கார்த்திக்குடன் ஜோடி போட்ட காஜல் அண்ணன் சூர்யாவுக்கு ஜோடியாகிறார்

சூர்யா அடுத்து நடிக்கவுள்ள மாற்றான் படத்தில் அவருக்கு ஜோடி போடுகிறார் காஜல் அகர்வால்.

ஏற்கனவே சூர்யாவின் தம்பி கார்த்தியுடன் நான் மகான் அல்ல படத்தில் ஜோடி போட்டு நடித்தவர் காஜல். இந்தப் படத்திற்குப் பிறகு அவருடன் சேர்த்து கிசுகிசுக்கவும் பட்டார்.

இந்த நிலையில் தற்போது கார்த்தியின் அண்ணன் சூர்யாவுடன் இணைகிறார் காஜல். மாற்றான் படத்தின் மூலம் சூர்யாவுடன் இணைகிறார் காஜல்.

படத்தை இயக்கப் போவது கே.வி.ஆனந்த். கோ படத்திற்குப் பிறகு இப்படத்திற்கு வருகிறார் ஆனந்த். அதேபோல தற்போது ஏழாம் அறிவு படத்தில்நடித்து வரும் சூர்யா அந்தப் படத்தை முடித்த பின்னர் இப்படத்திற்கு வருகிறார்.

மாற்றான் பட நாயகியாக யாரைப் போடுவது என்பதில் ஆரம்பத்தில் பெரும் குழப்பம் இருந்ததாம். தமன்னா, அனுஷ்கா என பலரையும் பரிசீலித்துள்ளனர். அமலா பாலின் பெயரும் கூட அடிபட்டதாம். தமன்னா வேண்டாம் என்று சூர்யா தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது. அனுஷ்காவும் பின்னர் நிராகரிக்கப்பட்டார். அமலா பால் ஸ்டிராங்கான முகமாக இல்லை என்பதால் நிராகரிக்கப்பட்டுள்ளார். இறுதியில் காஜல் அகர்வால் தேர்வானார்.

காஜலிடம் ஆனந்த் கதையைச் சொல்லியுள்ளாராம். விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்கிறார்கள்.

நான் மகான் அல்ல படத்திற்குப் பிறகு காஜலைத் தேடி தமிழ்ப் படங்கள் எதுவும் வரவில்லை. இதனால் தெலுங்குக்குத் திரும்பினார் காஜல். அப்படியே பாலிவுட்டுக்குப் போய் விடலாமா என்ற யோசனையில் இருந்தவரை ஆனந்த் அணுக, இப்போது மீண்டும் தமிழுக்குத் திரும்பிகிறார் காஜல்.
 

Post a Comment