படப்பிடிப்புக்கு மட்டம்: நடிகை நந்தகி மீது புகார்

|


கருவாச்சி படத்தின் ஷூட்டிங்கின்போது திடீரென்று காணாமல் போன நடிகை நந்தகி மீது நடிகர் சங்கத்தில் புகார் தரப்பட்டுள்ளது.

‘அவள் பெயர் தமிழரசி’ மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நந்தகி. இவர் தற்போது ஐஸ் ஹவுஸ் தியாகு தயாரிக்கும் ‘இத்தனை நாளாய் எங்கிருந்தாய்’ படத்திலும், ஏ.ஆர். சிவா இயக்கும் ‘கருவாச்சி’ படத்திலும் நடித்து வருகிறார்.

இதில் கருவாச்சி படப்பிடிப்பு சேலம் அருகே நடந்து வருகிறது. இப்படத்தில் நடிக்க நந்தகிக்கு ரூ.2 லட்சம் சம்பளம் பேசி ஒப்பந்தம் செய்தனர்.

ரூ.25 ஆயிரம் முன் பணமாக கொடுக்கப்பட்டது. படப்பிடிப்பில் பங்கேற்க சேலம் சென்று அங்குள்ள ஓட்டல் ஒன்றில் தங்கி இருந்தார். ஓரிரு நாள் படப்பிடிப்பில் பங்கேற்ற பின் ரூ.1 லட்சம் கேட்டுள்ளார்.

படக் குழுவினரோ, “இன்னும் 50 நாள் நடிக்க வேண்டி உள்ளது. இப்போதே ஒரு லட்சம் கேட்கிறீர்களே?” என்று ஆதங்கப்பட்டுள்ளனர். அத்துடன் ரூ.1 லட்சத்தை காசோலையாக தருவதாக கூறி உள்ளனர். அதற்கு நந்தகி சம்மதிக்கவில்லை. ரொக்கமாக தர வேண்டும் என்று அடம் பிடித்தாராம். பணம் வராததால் படப்பிடிப்புக்கு செல்லாமல் திடீரென மாயமானார்.

அவர் தங்கியிருந்த ஓட்டல் ரூம் காலி செய்யப்பட்டு இருந்தது. படக்குழுவினர் நந்தகியை தேடி அலைந்து கண்டுபிடிக்க முடியாமல் அவரது சொந்த ஊரான காஞ்சீபுரம் வந்தனர். அங்கும் வீடு பூட்டி இருந்ததாம். இதையடுத்து தயாரிப்பாளர் சங்கத்தில் நந்தகி மீது புகார் அளித்தனர்.

நந்தகி மாயமானதால் பெருமளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தங்கள் புகாரில் தெரிவித்துள்ளனர்.

 

Post a Comment