நெஞ்செரிச்சல், தொண்டை வலி காரணமாக உடலில் சோர்வு ஏற்படுவதாக அவர் தெரிவித்தார்.
அமிதாப் பச்சன் உடல் ரீதியாக பெரும் பிரச்சினைகளைச் சந்தித்தவர். 1982-ல் கூலி படப்பிடிப்பின்போது அவரது வயிற்றில் பெரிய அளவில் அடிபட்டது. உயிருக்குப் போராடிய அவரை கஷ்டப்பட்டு மருத்துவர்கள் காப்பாற்றிவிட்டனர்.
பின்னர் 2005-ல் மீண்டும் அவரது உடல் நிலை பெரும் பாதிப்புக்குள்ளானது. 1 ஆண்டு வரை ஆனது அவர் சாதாரண நிலைக்குத் திரும்ப.
இப்போது மீண்டும் நெஞ்செரிச்சல், வயிற்றுக் கோளாறு மற்றும் தொண்டையில் வலி காணப்படுவதாக அவர் தனது பிளாகில் எழுதியுள்ளார். இந்த கோளாறுகள் காரணமாக தன்னால் தொடர்ந்து நிற்க முடியாத நிலை உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அமிதாப் நடித்துள்ள புத்தா என்ற படம் வரும் ஜூலை 1-ம் தேதி திரைக்கு வருகிறது. இதற்கான விளம்பர பணிகளில் தீவிரமாக இருந்தார் அமிதாப். இந்த நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது தனக்கு கவலை அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.
Post a Comment