6/27/2011 10:31:49 AM
ஏ.ஆர்.முருகதாஸ், ஃபோக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோவுடன் இணைந்து தயாரிக்கும் படம் 'எங்கேயும் எப்போதும்'. அவரது உதவியாளர் எம்.சரவணன் இயக்குகிறார். ஜெய், அஞ்சலி, ஷர்வானந்த், அனன்யா நடிக்கிறார்கள். படம் பற்றி சரவணன் கூறியதாவது: 90 சதவிகித படப்பிடிப்பு முடிந்துள்ளது. இரண்டு தனித்தனி காதல் ஜோடிகளின் கதை. கிளைமாக்சில் இரு ஜோடிகளும் இணைவது மாதிரியான திரைக்கதை. படத்தில் வில்லன் கிடையாது. இரு ஹீரோயின்கள் நடிப்பதால் அவர்களுக்குள் ஈகோ வரலாம் என்றுதான் எல்லோரும் நினைக்கிறார்கள். இந்தப் படத்தில் அப்படி இல்லை. அஞ்சலியும், அனன்யாவும் இணைந்து நடிக்கும் காட்சிகள் இல்லை. திரைக்கதையில் இருவருக்குமே சம வாய்ப்பு உள்ளது. சில காட்சிகள் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னது தவிர, தயாரிப்பாளர் என்ற முறையில் ஏ.ஆர்.முருகதாசின் தலையீடு இல்லை. படப்பிடிப்புக்குகூட அவர் வந்ததில்லை. எடுத்த வரை பார்த்துவிட்டு பாராட்டினார்.
Post a Comment