மம்பட்டியானுக்காக சின்ன பொண்ணு சேல ரீமிக்ஸ்!
6/20/2011 11:42:36 AM
தியாகராஜன் தயாரித்து, இயக்கும் படம் 'மம்பட்டியான்'. இது, 25 வருடங்களுக்கு முன் தியாகராஜன் நடிப்பில் ரிலீசான 'மலையூர் மம்பட்டியான்' படத்தின் ரீமேக். பிரசாந்த், மீரா ஜாஸ்மின் ஜோடி. இளையராஜா பாடி இசையமைத்த 'காட்டுவழி போற' பாடல், இப்போது இருமுறை ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. டைட்டிலில் இடம்பெறும் பாடலை தியாகராஜன் பாடியுள்ளார். அதே பாடலை சிம்பு வித்தியாசமான குரலில் பாடியிருக்கிறார். இதற்கு பிரசாந்த் மற்றும் நடனக் கலைஞர்கள் நடித்துள்ளனர். 'சின்ன பொண்ணு சேல' பாடலும் ஹரீஷ் ராகவேந்திரா, ஸ்ரேயா கோஷல் குரலில் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது.
Post a Comment