6/25/2011 10:58:55 AM
பட்டியல் சேகர் தயாரிப்பில், சத்யசிவா இயக்கும் படம் 'கழுகு'. இதில் கிருஷ்ணா ஜோடியாக நடிக்கும் பிந்து மாதவி கூறியதாவது: தெலுங்கில் ஐந்து படங்களில் நடித்துள்ளேன். தமிழில் கவுதம் வாசுதேவ் மேனன் தயாரிக்கும் 'வெப்பம்' படத்தில் அறிமுமாகிறேன். அடுத்து நடிக்கும் படம், 'கழுகு'. இதன் ஷூட்டிங் மூணாறு மலைப்பகுதிகளில் நடந்தது. தினமும் இரவு நேரத்தில் ஷூட்டிங் நடக்கும். கடுமையான குளிரில் காய்ச்சல் வந்துவிடும். தினமும், டாக்டரை அருகில் வைத்துக்கொண்டே ஷூட்டிங் நடந்தது. இதில் நானும், ஹீரோ கிருஷ்ணாவும் நேரில் சந்திக்கும் காட்சி புதுமையாக இருக்கும். காமெடிக்கு முக்கியத்துவம் உள்ள இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் நெஞ்சை உருக்குவதாக இருக்கும். எனது கேரக்டரை உணர்ந்து நடித்துள்ளேன். அடுத்து 'ஈரம்' அறிவழகன் இயக்கத்தில், நகுலன் ஜோடியாக நடிக்கிறேன்.
Post a Comment