6/25/2011 11:04:44 AM
குட்டி ராதிகா தயாரிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் திவ்யா. தமிழில் 'இயற்கை', 'வர்ண ஜாலம்' உட்பட பல படங்களில் நடித்தவர் கன்னட நடிகை குட்டி ராதிகா. சில காலம் படங்களில் நடிக்காமல் இருந்த ராதிகா, திடீரென கன்னட அரசியல்வாதி குமாரசாமியை திருமணம் செய்துகொண்டு ஒரு குழந்தைக்கு அம்மா ஆனார். இப்போது அவர் பட தயாரிப்புகளில் இறங்கியுள்ளார். அவர் தயாரிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் திவ்யா. இதுபற்றி திவ்யா கூறும்போது, 'சமிக்ஷா ஆர்ட்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்துள்ளார் ராதிகா. சமிக்ஷா அவரது குழந்தையின் பெயர். ராதிகாவுடன் கன்னடப் படங்களில் சேர்ந்து நடிக்க முடியவில்லை. இப்போது அவரது தயாரிப்பில் நடிப்பதை பெருமையாக நினைக்கிறேன். இது காதல் கதைதான். டாக்டர் சூரி இயக்குகிறார். விரைவில் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது' என்றார்.
Post a Comment