6/21/2011 3:43:09 PM
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...
தம்பி இயக்குனரோடு கில்லி நடிகரு சேர இருந்த படம் கிடப்புக்கு போகுதாம்... போகுதாம்... நடிகருக்கு இயக்குனர் எழுதிய கதை பிடிக்கலையாம்... பிடிக்கலையாம்... இதனால நடிகருக்கும் இயக்குனருக்கும் லேசா முட்டிக்கிச்சாம்... முட்டிக்கிச்சாம்... இதனால சேர்ந்து படம் பண்ணக்கூடாதுனு ரெண்டு பேரும் முடிவு பண்ணியிருக்காங்களாம்... பண்ணியிருக்காங்களாம்...
சைக்கோ கதையை எடுத்து வாங்கி கட்டிக்கிட்ட மேனன் இயக்குனரு, மறுபடியும் ரொமான்ஸ் கதைக்கு மாறிட்டாராம்... மாறிட்டாராம்... ஜீவமான நடிகரோடு டீம் செட் பண்றவர், மறுபடியும் ஹாரிசான இசையோடு இணையுற முயற்சில இருக்காராம். அடிக்கடி போன்லயும், நேரத்தை ஒதுக்கி நேர்லயும் சந்திச்சு கதைய பற்றி இசைகிட்ட டிஸ்கஷன் நடத்துறாராம்... நடத்துறாராம்...
தானே ஹீரோவா நடிச்சு, படம் இயக¢கினாரு ரஞ்சித நடிகரு. திரும்ப ஹீரோ ஆசை வாட்டி வதைக்குதாம்... வதைக்குதாம்... ஆனா, பைனான்ஸ்தான் பெரிய பிரச்னையா இருக்காம். நடிச்சு, இயக்கிய படங்கள் எல்லாமே அவுட் ஆனதால, நடிகரை பார்த்தாலே பைனான்சியருங்க எஸ் ஆகுறாங்களாம்... ஆகுறாங்களாம்...
Post a Comment