மதி கெட்டான் சாலை!

|

Tags:


மதி கெட்டான் சாலை. இது ஒரு தமிழ்ப் படத்தின் பெயர். வித்தியாசமான காதல் கதையுடன் கூடியதாக இப்படத்தை உருவாக்கியுள்ளாராம் படத்தின் இயக்குநர் ஜி.பட்டுராஜன்.

முற்றிலும் இளைஞர்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இது, ஒரு தலைக் காதலைச் சொல்லும் கதையாகும். படத்தின் நாயகன் ஆதர்ஷ். நாயகியாக நடித்திருப்பவர் திவ்யா நாகேஷ். இவர் ஏற்கனவே பாசக்கார நண்பர்கள் படத்தில் நாயகியாக நடித்து அறிமுகமானவர்.

இதுபோக கவர்ச்சிக்காக பிரத்யேகமாக அனுஷாவை சேர்த்துள்ளனர். படத்தின் ஆடியோ வெளியீட்டின்போது படு கவர்ச்சிகரமாக வந்திருந்தார் அனுஷா. இதன் மூலம் தனது கொள்கையை அவர் வெட்ட வெளிச்சமாக்கிக் காட்டியிருந்தார். படத்தில் அவருக்கு கவர்ச்சி காட்ட போதுமான சீன்களை வைத்துள்ளாராம் இயக்குநர் பட்டுராஜன்.

அனுஷாவுக்கு இந்தப் படம் போக கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம் என்ற படமும் கையில் உள்ளதாம். கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம் என்றாலும் கூட அனுஷாவிடம் நிறைய கவர்ச்சி உள்ளது என்பதும் சொல்லியாக வேண்டிய விஷயம்.

படத்தின் நாயகி திவ்யா நாகேஷுக்கு ஹீரோயினாக இது 2வது படமாக இருந்தாலும் குழந்தை நட்சத்திரமாக 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளாராம். படத்தை வித்தியாசமான லொகேஷன்களில், வித்தியாசமான காட்சியமைப்புடன் சிறப்பாக உருவாக்கியுள்ளதாக கூறும் பட்டுராஜன், பாடலுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதாகவும் கூறுகிறார்.

வழக்கமான ஒரு தலைக் காதலாக இல்லாமல் இது வித்தியாசமானதாக இருக்கும், ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவம் கிடைக்கும் என்கிறார் நம்பிக்கையுடன் ராஜன்.
 

Post a Comment