பெயர் குழப்பத்தில் தனுஷ் படம்?
6/27/2011 12:21:25 PM
தன்னுடைய அண்ணன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ‘இரண்டாம் உலகம்’. தனுஷ், ஆண்ட்ரியா நடிப்பில் தொடங்கப்பட்ட படம் இரண்டாம் உலகம். பிறகு ஆண்ட்ரியா படத்திலிருந்து விலக ரிச்சா என்பவர் நடித்து வருகிறார். இந்நிலையில் அண்ணன் இயக்கத்தில் நான் நடிக்கும் படத்தின் பெயர் இரண்டாம் உலகம் அல்ல என்று தனுஷ் தெரிவித்துள்ளார். செல்வராகவன் உள்பட யாரும் இதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. அப்படியானால் படத்தின் பெயர்? அது பற்றி தனுஷிடம் எந்த பதிலுமில்லை. இது மாலை நேரத்து மயக்கம் என்று பெயர் வைத்தாலும் ஆச்சரியமில்லை.
Post a Comment