6/27/2011 10:30:23 AM
'அபியும் நானும்', 'உன்னைப்போல் ஒருவன்', 'கந்தகார்' படங்களில் நடித்துள்ளவர் கணேஷ் வெங்கட்ராம். இப்போது மகேஷ்பட் தயாரிக்கும், 'குச் லோக்' என்ற இந்திப் படத்தில் நடித்து வருகிறார். அவர் கூறியதாவது: தமிழில் நான் நடித்துள்ள 'முறியடி' விரைவில் ரிலீஸ் ஆகும். இதையடுத்து 'பனித்துளி' என்ற படத்தில் நடித்துள்ளேன். ரொமான்டிக் த்ரில்லர் கதையான இது, வித்தியாசமான திரைக்கதையை கொண்ட படம். இந்தப் படத்தின் ஷூட்டிங் அமெரிக்காவில் நடந்துள்ளது. இப்போது இந்தியில் 'குச் லோக்', தெலுங்கில் 'தமருகம்' படங்களில் நடித்து வருகிறேன். இந்தி படத்தில் ஊர்வசி சர்மா, அனுபம் கெர், ரதி, குல்ஷன் குரோவர் ஆகியோருடன் நடித்து வருவது புதிய அனுபவமாக இருக்கிறது. தெலுங்கு படத்தில் நாகார்ஜுனா ஹீரோ. அனுஷ்கா ஹீரோயின். இந்தப் படத்தில் 50 சதவிகிதம் கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெறுகிறது.
சினிமாவுக்கு வந்த சில வருடங்களிலேயே கமல்ஹாசன், அமிதாப், மோகன்லால், பிரகாஷ்ராஜ், நாகார்ஜுனா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டேன். இன்னும் ரஜினிகாந்த் மட்டுமே பாக்கி. அவருடனும் நடித்துவிட்டால் என் ஆசை நிறைவேறிவிடும். சமீபத்தில் ஆக்ஷன் காட்சிகளுடன் கூடிய போட்டோ ஷூட் நடத்தினேன். இது ஏன் என்று கேட்கிறார்கள். எல்லா ஹீரோகளுக்கும் ஆக்ஷன் ஆசை இருக்கும். அது எனக்கும் இருப்பதால் அப்படி போட்டோ ஷூட் எடுத்தேன். இவ்வாறு கணேஷ் வெங்கட்ராம் கூறினார்.
Post a Comment