அவன் இவனில் சர்ச்சைக்குரிய வசனங்கள் நீக்க வேணடும் : போலீஸ் அதிகாரிகள்!

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
அவன் இவனில் சர்ச்சைக்குரிய வசனங்கள் நீக்க வேணடும் : போலீஸ் அதிகாரிகள்!

6/25/2011 12:28:54 PM

பாலாவின் அவன் இவன் படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளில் இடம்பெற்றுள்ள ஆட்சேபணைக்குரிய சில காட்சிகளை நீக்குமாறு படக்குழுவினரைக் கேட்டுக் கொண்டுள்ளார் கோவை மாநகர கமிஷனர் அம்ரேஷ் பூஜாரி. இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சியில் குறிப்பிட்ட சமூக மக்களின் இஷ்டதெய்வமான சொரிமுத்து அய்யனாரை கேலி செய்வதாகவும் சில காட்சிகளில் ஜமீனைக் கேலி செய்வதாகவும் கூறி சில அமைப்பினர் வழக்கு தொடர்ந்துள்ளனர். கோவையைச் சேர்ந்த அரசியல் கட்சி ஒன்றும் இதுகுறித்து மாநகர கமிஷனர் அம்ரேஷ் பூஜாரியை சந்தித்து, பாலா, விஷால், ஆர்யா மீது வழக்கு பதிவு செய்யவுமாறு புகார் கொடுத்தனர். இதையடுத்து இரு போலீசாரை நேற்று இரவு தியேட்டருக்கு அனுப்பி அவன்-இவன் படத்தை பார்க்கச் செய்த கமிஷனர், சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்கும்படி படக்குழுவினரிடம் கேட்டுக் கொண்டுள்ளார். இதனை கமிஷனரும் நிருபர்களிடம் உறுதிப்படுத்தினார். போலீசாரின் வேண்டுகோளுக்கு பாலாவின் பதில் என்ன என்பது நாளை தெரிந்துவிடும்.




 

Post a Comment