திருமண பந்தத்தில் இணைந்தார் 'ஜேம்ஸ் பாண்ட்' டேனியல் கிரேக்

|


லண்டன்: நடப்பு 'ஜேம்ஸ் பாண்ட்' டேனியல் கிரேக் தனது சக நடிகையான ராசெல் வேஷை திருமணம் செய்து கொண்டார்.

இங்கிலாந்தைச் சேர்ந்தவர் டேனியல் கிரேக் (43). தற்போதைய ஜேம்ஸ் பாண்ட் நடிகர். இவரும் இங்கிலாந்தைச் சேர்ந்த நடிகை ராசெல் வேஷும் சேர்ந்து ட்ரீம் ஹவுஸ் என்ற படத்தில் கணவன், மனைவியாக நடித்து வருகின்றனர். இந்நிலையில் யாரும் எதிர்பாரா வண்ணம் நிஜ வாழ்விலும் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.

டேனியலும், ரேசெலும் கடந்த புதன்கிழமை நியூயார்க்கில் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டனர் என்று டேனியலின் செய்தித் தொடர்பாளர் ராபின் பௌன் தெரிவித்தார்.

இந்த திருமணத்தில் இரண்டு பேர் மட்டுமே கலந்து கொண்டார்கள். அதில் ஒருவர் ரேசெலின் 4 வயது மகன் ஹென்ரி, மற்றொருவர் டேனியலின் 18 வயது மகள் எல்லா.

டேனியல் சட்சுகி மிட்ஷெல் என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார். அன்மையில் தான் இந்த ஜோடி பிரிந்தது. இதேபோன்று ரேசெல் பிளாக் ஸ்வான் என்ற படத்தின் இயக்குனர் டாரன் அரோனோப்ஸ்கியுடன் நீண்ட காலமாக இருந்தார். அவர் தான் ஹென்ரியின் தந்தை (தலை 'லைட்டா' சுத்துதுல்ல!).

தி கான்ஸ்டன்ட் கார்டனர் என்ற படத்தில் சிறப்பாக நடித்ததற்காக ரேசெல் வேஷ் கடந்த 2005-ம் ஆண்டு சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருது பெற்றவர்.
 

Post a Comment