ரசிகர்கள் கண்தானம் செய்ய விஜய் வேண்டுகோள்!
6/21/2011 12:35:51 PM
நடிகர் இளைய தளபதி விஜய்யின் பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து அவர் தனது ரசிகர்களுக்கு கண்தானம் செய்யும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில் எனது பிறந்தநாளை ஏழை-எளியவர்களுக்கு நற்பணி செய்யும் நாளாக கொண்டாடும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மக்கள் இயக்கத்தை சேர்ந்த 100 பேர் சென்னையில், என் முன்னிலையில் கண்தானம் செய்கிறார்கள். தமிழகம் எங்கும் என்னை நேசிக்கும் அனைவரும் கண்தானம் செய்தால் மகிழ்ச்சி அடைவேன் என்றார்.
Post a Comment