தெரு நாய்கள்... த்ரிஷாவின் 'கருணை'!

|

Tags: peta


தெரு நாய்களைத் தத்தெடுத்த வளர்க்குமாறு நடிகை த்ரிஷா வேண்டுகோள் விடுக்கும் விளம்பரம் நாளை வெளியாகிறது.

ஒருமுறை ஹைதராபாத்தில் படப்பிடிப்புக்கு சென்றபோது ரோட்டோரம் நாய்க்குட்டியொன்று அடிபட்டு கிடந்தது. காரை நிறுத்தி அந்த நாயை எடுத்த போய் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தார் த்ரிஷா.

சென்னை த ிரும்பும் போது நாய்க்குட்டியையும் தன்னோடு கொண்டு வந்து விட்டார். அது தற்போது திரிஷா வீட்டில் வளர்கிறது. இதைத் தொடர்ந்து நாய்களை தத்து எடுக்கும்படி அவ்வப்போது வேண்டுகோள் விடுத்து வந்தார்.

அவரது இந்த அக்கறையைப் பார்த்து பிராணிகள் நல அமைப்பின் (PETA) இந்திய அளவிலான விளம்பர தூதுவராக நியமித்தனர். இதனால் தெரு நாய்களைத் தத்தெடுக்க இன்னும் முனைப்புடன் வலியுறுத்தி வ� �்தார் த்ரிஷா.

இப்போது அந்த பிராணிகள் நல அமைப்பு விளம்பர படமொன்று தயாரித்துள்ளது. இதில் திரிஷா நடித்துள்ளார். இப்படம் நாளை வெளியாகிறது. நாயை கட்டிப் பிடித்தபடி இதில் போஸ் கொடுத்துள்ளார் த்ரிஷா.

இதுகுறித்து த்ரிஷா கூறுகையில், "நிறைய வீடுகளில் நாய்கள் வளர்க்கின்றனர். பெரும்பாலானோர் நாய்களை காசு கொடுத்து வாங்கி வளர்க்கிறார்கள். அப்படி செய்யக்கூடாது. தெரு ந� �ய்களும் நல்ல நாய்கள்தான். அவற்றை தத்து எடுத்து வளர்க்க வேண்டும். நிறைய இடங்களில் தெரு நாய்கள் ஆதரவின்றி சுற்றித் திரிக்கின்றன. அவற்றை ஒவ்வொருவரும் வீட்டுக்கு எடுத்து போய் வளர்க்க வேண்டும்," என்றார்.

தெரு நாய்களை பள்ளி மாணவர்கள் கல்லால் அடித்து விரட்டக் கூடாது என்றும் அந்த விளம்பரத்தில் வலியுறுத்தியுள்ளார் த்ரிஷா.
 

Post a Comment