6/1/2011 12:09:37 PM
முதல்வர் ஜெயலலிதாவை, தனுஷ் நேற்று சந்தித்து பேசினார். அப்போது 'ஆடுகளம்' படத்துக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதுக்கு தேர்வு பெற்றதற்காக அவருக்கு ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்தார். சன் பிக்சர்ஸ் வெளியிட்ட 'ஆடுகளம்' படத்துக்கு 6 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. இதில் நடித்த தனுஷ், சிறந்த நடிகருக்கான விருதை பெறுகிறார். இந்நிலையில், நேற்று கோட்டையில் முதல்வர் ஜெயலலிதாவை தனுஷ் சந்தித்து பேசினார். அவருடன் 'ஆடுகளம்' படத்தின் இயக்குனர் வெற்றிமாறன், எடிட்டர் கிஷோர், தயாரிப்பாளர் கதிரேசன் ஆகியோரும் சென்றிருந்தனர். முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதாவுக்கு தனுஷ் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். தேசிய விருது பெற்றதற்காக தனுஷ், வெற்றிமாறன் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்தார். ரஜினி உடல்நிலை பின்னர் நிருபர்களிடம் தனுஷ் கூறும்போது, 'ஆடுகளம்' படத்துக்கு 6 தேசிய விருதுகள் கிடைத்துள்ளது. இதற்காக முதல்வர் ஜெயலலிதா எங்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்தும் விசாரித்தார்' என்றார்.
Post a Comment