உடல் எடையை குறைக்கும் அ‌‌ஜீத்

|

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

உடல் எடையை குறைக்கும் அ‌‌ஜீத்

6/2/2011 11:52:36 AM

மங்காத்தா படத்தை முடித்துவிட்டு தனது அடுத்தப் படமான பில்லா இரண்டாம் பாகத்தில் கவனம் செலுத்தவுள்ளார் அ‌‌ஜீத். வெங்கட்பிரபு இயக்கத்தில் அ‌ஜீத் நடித்திருக்கும் மங்காத்தா படப்பிடிப்பு ஏறக்குறைய முடிந்துவிட்டது. இதில் ஹாலிவுட் நடிகர் ஜார்‌ஜ் குளூனியின் கெட்டப்பில் அ‌ஜீத் நடித்துள்ளார். இந்த கெட்டப்பை அ‌ஜீத்துக்கு ப‌ரிந்துரைத்தவர் வெங்கட்பிரபு.
அஜீத்தின் அடுத்தப் படம் பில்லா இரண்டாம் பாகம். இதில் சாதாரண இளைஞன் எப்படி பில்லாவாக மாறினான் என்பதை காண்பிக்க இருக்கிறார்கள். அதாவது பில்லா அ‌ஜீத்தின் இளமைக்காலம்தான் இந்த பில்லா இரண்டாம் பாகம். முதல் பாகத்தைவிட இளமையாக‌த் தெ‌ரிய வேண்டும் என்பதற்காக உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் அ‌ஜீத். அடுத்த மாதம் 20ஆம் தேதி படப்பிடிப்பை தொடங்கவும் திட்டமிட்டுள்ளனர். ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என தெ‌ரிகிறது.

 

Post a Comment