அவன்-இவன்: பாலாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

|


அவன் இவன் படத்தில் அவதூறாக சித்தரிக்கப்பட்டுள்ள காட்சிகள் குறித்து தொடரப்பட்ட வழக்கில் இயக்குநர் பாலாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது அம்பாசமுத்திரம் நீதிமன்றம்.

அவன்-இவன் திரைப்படத்தில் ஜமீ்ன் தீர்த்தப்பதி மற்றும் சொரிமுத்து அய்யனார் கோயில் குறித்த அவதூறு காட்சிகளையும், வசனங்களையும் நீக்க கோரி சிங்கம்பட்டி சமஸ்தானம் இளைய ஜமீன்தார் டிஎன்எஸ்எம் சங்கர் ஆத்மஜன் அம்பாசமுத்திரம் கூடுதல செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார்.

இவ்வழக்கில் இடைக்கால பரிகாரம் கோரி மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் ராமசுப்பிரமணியன், வக்கீ்ல்கள் ராஜங்கம், ராமு, சண்முகசுந்தரம், சந்திரன், முத்துராமன் வாதிட்டனர்.

வாதங்களை கேட்ட நீதிபதி மும்மூர்த்தி, இப்படத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ் அகோரம், டைரக்டர் பாலா, நடிகர்கள் ஆரியா ஜிஎம் குமார் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
 

Post a Comment