ஹீரோவான மயில்சாமி மகன்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஹீரோவான மயில்சாமி மகன்

6/20/2011 12:25:39 PM

தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் உறவுகளின் மேன்மையை சொல்லும் ராசு.மதுரவன் 'மாயாண்டி குடும்பத்தார்', 'முத்துக்கு முத்தாக' படங்களுக்கு பிறகு இயக்கும் படம் 'பார்த்தோம் பழகினோம்'. இதில் நாயகனாக புதுமுகம் அன்பு நடிக்கிறார். இவர் பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் மகன். "ஒரு அழகான குடும்பம். அந்தக் குடும்பத்தில் கடைசி மகனாக பிறக்கும் நாயகன். அவனுடைய குடும்பம்,  படிப்பு, காதல் என்று எல்லாம் கலந்த கலவையாக இந்தப் படம் இருக்கும். கவி பெரிய தம்பி இசையமைக்கிறார். தமிழ்நாடு, கேரளா எல்லைப் பகுதிகளில் 50 நாட்கள் தொடர்ந்து ஒரே கட்டமாக இந்தப் படத்தை எடுக்கவுள்ளேன்" என்கிறார் இயக்குனர் ராசு.மதுரவன்.

 

Post a Comment