6/4/2011 1:10:12 PM
ஜெய் பாலாஜி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் படம், 'ஆயுதப் போராட்டம்'. ஹீரோவாக நடிக்கும் ஜெய் ஆகாஷ், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். ப்ரீத்தி மினாள், அனிதா ரெட்டி ஹீரோயின்கள். சாய் சதீஷ், ஒளிப்பதிவு. நந்தன் ராஜ், இசை. ஆண்டாள் பிரியதர்ஷினி, செந்தமிழ்தாசன், தமிழமுதன் பாடல்கள். இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி வெளியிட, இயக்குனர் பிரபு சாலமன் பெற்றார். விநியோகஸ்தர் சங்க தலைவர் கலைப்புலி ஜி.சேகரன், பி.எல்.தேனப்பன், ஜெய் ஆகாஷ், அனிதா ரெட்டி உட்பட பலர் கலந்து கொண்டனர். பிறகு நிருபர்களிடம் ஜெய் ஆகாஷ் கூறுகையில், 'இந்திய தமிழனுக்கும், இலங்கை தமிழனுக்கும் இடையே நடக்கும் உணர்வுப் போராட்டம் இப்படத்தின் கரு. தாய்லாந்து, சீனா, ஹாங்காங், லண்டன், பிரான்ஸ், ஜெர்மனி நாடுகளில் பாடல்கள் மற்றும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ள நான், திரையுலகில் மீண்டும் என்னை நிலைநிறுத்திக் கொள்ள இதை இயக்குகிறேன்' என்றார்.
Post a Comment