சிங்கப்பூரில் உள்ள மெளன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் ரஜினிகாந்த். அவரது உடல் நலம் குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த செய்தியும் அவரது குடும்பத்தாரிடமிருந்தோ, மருத்துவமனையிடமிருந்தோ வெளியிடப்படவில்லை.
தற்போது அவருக்கு அளிக்கப்பட்டு வந்த டயாலிசிஸ் சிகிச்சை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. அவர் இப்போது உடல் நலம் தேறி வருவதாக தெரிகிறது. தனது அறை மற்றும் மருத்துவமனை வளாகத்தில் அவர் தினசரி அரை மணி நேரம் வாக்கிங் போகிறாராம்.
இன்னும் பத்து நாட்களுக்கு அவர் மருத்துவமனையில் தங்கியிருப்பார் என்றும் அதன் பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது. டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின்னர் அவர் ஒரு மாதம் வரை சிங்கப்பூரிலேயே தங்கியிருந்து ஓய்வெடுப்பார் என்றும் அவ்வப்போது மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து கொள்வார் என்றும் அதன் பின்னர்தான் அவர் நாடு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.
Post a Comment