6/22/2011 11:38:29 AM
'மைனா' ஹிட்டுக்குப் பிறகு பிரபு சாலமன் இயக்கும் படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை. இந்தப் படத்தில் சிவாஜி பேரனும், பிரபு மகனுமான விக்ரம் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஹீரோயினாக, மலையாள நடிகை லட்சுமி மேனன் நடிக்கிறார். விக்ரம், லட்சுமி மேனன் ஆகியோரின் பெயர்கள் சினிமாவுக்காக மாற்றப்படுகிறது. இதில் நடிப்பதற்காக, விக்ரமுக்கு சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. கேரளாவிலுள்ள ஒட்டப்பாளையத்துக்கு அடுத்த மாதம் 5ம் தேதி செல்லும் விக்ரம், மகாதேவன் என்ற யானையுடன் பழகுகிறார். 20 நாட்கள் ஒட்டப்பாளையத்தில் தங்கி, அங்குள்ள மக்களின் பழக்க வழக்கங்களையும், நடை, உடை, பாவனைகள் குறித்தும் தெரிந்துகொள்கிறார். மேலும், தன் கேரக்டருக்காக தாடி, மீசை, நீளமான தலைமுடி வளர்க்கிறார். ஆகஸ்ட் மாதம் முதல் அரக்குவேலி, ஒட்டப்பாளையம் மலைப்பகுதிகளில் ஷூட்டிங் நடக்கிறது. குட்டி யானைகள் ஏராளமாகக் காணப்படும் தாய்லாந்து நாட்டில், டங்குமய் என்ற இடத்தில் பிளாஷ்பேக் காட்சிகள் படமாகின்றன.
Post a Comment