6/4/2011 1:08:16 PM
என்னை பற்றி, மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது குறித்து கவலையில்லை என்றார் ரீமா சென். இதுபற்றி அவர் கூறியதாவது: ஷிவ் கபூருடனான எனது திருமணம் பற்றி பல்வேறு வதந்திகள் வருகிறது. மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது பற்றி கவலையில்லை. எனக்கு திருமணம் நடந்தால் அதை மறைக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது. எப்போது திருமணம் நடந்தாலும் கண்டிப்பாகத் தெரியபடுத்திவிட்டே செய்வேன். தற்போது இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வருகிறேன். தமிழில் நல்ல கேரக்டருக்கு காத்திருக்கிறேன். நான் இந்தியில் நடித்த 'ஆக்ரோஷ்', தமிழில் நடித்த 'ஆயிரத்தில் ஒருவன்' படங்கள் சீரியசான கதைகளை கொண்டது. அதிலிருந்து விடுபடும் விதமாக தெலுங்கில் வி.என்.ஆதித்யா இயக்கும் காமெடி படத்தில் நடிக்கிறேன். இவ்வாறு ரீமா சென் கூறினார்.
Post a Comment